Thursday, December 25, 2025

புயல், கனமழை எச்சரிக்கை.. புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 நாள்கள் கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழை சேதம் தொடர்பான புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

இதே போல நாகப்பட்டினத்தில் அவசரக்கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண். 04365-1077, கட்டணமில்லா தொலைபேசி எண். 1800-233-4233 மற்றும் வாட்ஸ் ஆப் எண். 8110005558 ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News