சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த பகவதி ராஜா 37. இவர் தற்போது தேர்தல் பிரிவில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக தனது கையை சிறிய கத்தியால் கிழித்துக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
பணிச்சுமை காரணமாக ஊழியர் ஒருவர் கையை கிழித்துக்கொண்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
