நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்தும் அதிகமாக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 96.29 சதவீத S.I.R படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் 51.30 சதவீத S.I.R படிவங்கள் அதாவது 7,27,583 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 77 ஆயிரத்து 570 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சுகுமார் தெரிவித்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டம் முழுவதும் இறந்த வாக்காளர்கள் 54,913 பேர் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 18,933 பேரும், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 1,195 பேரும், இரட்டை வாக்காளர்கள் 2,529 பேரும் வாக்காளர் பட்டியலில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நெல்லை சட்டமன்ற தொகுதியில் 22,774 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர். அதில் அதிகபட்சமாக 15,150 இறந்த வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 7,005 பேரும்,
முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 60 பேரும், இரட்டை வாக்காளர்கள் 559 பேரும் உள்ளனர்.
பாளையங்கோட்டை தொகுதியில் 15,156 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர். அதில்
இறந்த வாக்காளர்கள் 11,996 பேரும், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 2,445 பேரும்,
முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 244 பேரும், இரட்டை வாக்காளர்கள் 471 பேரும் உள்ளனர்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 15,089 வாக்காளர்கள் நீக்கப்பட்ட உள்ளனர். அதில் இறந்த வாக்காளர்கள் 10,235 பேரும், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,812 பேரும், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 472 பேரும், இரட்டை வாக்காளர்கள் 570 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் 13,092 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வாக்காளர்கள் 9,910 பேரும், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 2,878 பேரும், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 62 பேரும், இரட்டை வாக்காளர்கள் 242 பேரும் நீக்கப்பட்ட உள்ளனர்.
ராதாபுரம் தொகுதியில் 11,459 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ள நிலையில், அதில் 7,622 வாக்காளர்கள் இறந்துவிட்டார்கள். நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 2,793 பேரும், முகவரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் 357 பேரும், இரட்டை வாக்காளர்கள் 687 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனனர்.
விநியோகம் செய்யப்பட்ட S.I.R படிவங்களில் 51.30 சதவீதம் அதாவது 7,27,583 படிவங்கள் பூர்த்தியாகி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அதில் மட்டுமே 77 ஆயிரத்து 570 வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டிய விவரம் தெரியவந்துள்ளது. 100 சதவீத படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
