Monday, January 26, 2026

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்

நீதிபதி சூர்யா காந்த் இன்று இந்திய உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முதல் முறையாக பிரேசில், கென்யா, மலேசியா, மொரிஷியஸ், பூட்டான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய 7 நாடுகளின் தலைமை நீதிபதிகள் தங்கள் பிரதிநிதிகளுடன் இதில் பங்கேற்றனர். நீதிபதி சூர்யா காந்த், பிப்ரவரி 9, 2027 வரை, அதாவது 14 மாதங்கள் இந்தப் பதவியில் நீடிப்பார்.

Related News

Latest News