பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் முதல் உணவு, முதல்நிலை ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு ஆதரவைக் கொடுக்கும் அருமையான உணவு. இந்நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது பீகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில தாய்மார்களுடைய பாலில் யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆய்வின் கண்டுபிடிப்புகள்
40 பெண்களிடமிருந்து எடுத்த தாய்ப்பாலில் U-238 யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. யுரேனியம் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருந்தாலும், 70% குழந்தைகளுக்கு சிறுநீரக, நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் அபாயம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மருத்துவர் அறிவுறுத்தாத வரை தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்றும் இதன் மூலமாகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிபுணர் கருத்து
குறிப்பாக பீகாரின் காக்காரியா மாவட்டத்தில் நிலத்தடி நீரில் யுரேனியம் அதிகரிப்பதால், தாய்ப்பாலும் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாவின் உடல் பெரும்பாலான யுரேனியத்தை உறிஞ்சுவதால், பாட்டில் அளவு அதிகமாக இல்லை எனவும், மருத்துவர் அறிவுரை கிடைக்காமல் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என கூறப்படுகிறது.
தண்ணீரில் லிட்டருக்கு 30 மைக்ரோகிராம் வரை யுரேனியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடலில் அவை சரியாகக் கையாள முடியாது என்பதால், அதிக அளவு இருந்தால் ஆபத்தாக இருக்கலாம். தற்போது, மேலும் விரிவான ஆய்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
