அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியானது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசை அமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ‘ஆர்யன்’ படம் வருகிற 28-ந்தேதி ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
