Monday, December 1, 2025

பீகாரில் இன்று முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நிதிஷ் குமார் 10 வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News