Friday, December 26, 2025

வேகமெடுக்கும் அமீபா : நீா் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க அறிவுரை

கேரளத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நீா் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குளம், ஏரி உள்ளிட்ட நீா் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

தனியாா் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீா் நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல் நீர்நிலைகளில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும், உயா் சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Related News

Latest News