மாதம் ரூ.25,000 தரும் தமிழக அரசு : குஷியில் மாணவர்கள்

பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ்நாடு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் அதன் முக்கியமான ஒன்றாகும்.

இந்த திட்டம் தமிழகத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், பழங்குடியினர் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது.

இந்த திட்டத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மற்றும் முனைவர் மேலாய்வாளர் படிப்பில் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.25,000 மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பவர்களின் குடும்பம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்குள் வருமானம் கொண்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிலும், பழங்குடியினர் சமூக ஆராய்ச்சியிலும் உதவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் விவரங்களுக்கு அரசு இணையதளத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Fellowship.tntwd.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.

Related News

Latest News