Monday, January 26, 2026

நடிகர் விஷால் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி..! என்ன காரணம்?

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனினை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியுள்ளது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இதனை மீறி விஷால் நிறுவனத்தினர் சில படங்களை வெளியிட்டதால் பணத்தை திருப்பித் தர உத்தரவிட கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் விஷாலுக்கு வழங்க உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் விஷால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக விசாரித்துள்ளதால், வேறு அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவு அளித்துள்ளது.

Related News

Latest News