இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. அதாவது, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியும் விலைஅதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9.000 உயர்ந்து பார் வெள்ளி 1.82.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
