TODAY GOLD RATE : (12-11-2025) சற்று ஆறுதல் தரும் தங்கம்!! இன்றைய விலை நிலவரம்..

இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 10ம் தேதி மட்டுமே ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது.

அதாவது, காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில் மாலையிலும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்தது.

இதன் காரணமாக, கிராம் தங்கம் ரூ. 11,480க்கும், ஒரு சவரன் ரூ. 91,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனித் தொடர்ந்து,நேற்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1000க்கும் மேல் அதிரடியாக உயர்ந்து, அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ. 11,700க்கும், ஒருசவரனுக்கு ரூ.93,600க்கும் விற்பனையானது.

இந்த நிலையில்,இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,800 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே, வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3000 உயர்ந்து பார் வெள்ளி 1.73.000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News