கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ’காந்தாரா’ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது.
இதையடுத்து கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் 840 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பிளாக்பஸ்டர் ஹிட்டான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பாக வசூல் செய்தது. கர்நாடகாவில் ரூ.245 கோடி, தமிழ்நாட்டில் ரூ.71.75 கோடி, கேரளாவில் ரூ.55.68 கோடி, இந்தி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.251 கோடி வசூலித்தது.
வெளிநாடுகளில் ரூ.110 கோடி வசூலித்தது. உலகளவில் ரூ.840 கோடி வசூலித்தாலும், தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு இப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் மொத்த ஷேர் வசூல் ரூ.66.84 கோடியாக பதிவானது. ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் ரூ.91 கோடி என்பதால், விநியோகஸ்தர்களுக்கு ரூ.25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
