பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி தர்மேந்திரா உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அவரது மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்துள்ளார். தனது தந்தை நலமுடன் இருப்பதாகவும் தவறான செய்தியை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
