Monday, January 26, 2026

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் காலமானார்

நடிகர் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார்.

சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். அவருக்கு, கேபிஒய் பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்து செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News