தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா. இதனைத் தொடர்ந்து, The Girlfriend படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையை மேற்கொண்டுள்ளார்.
அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃfirst single நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், The Girlfriend திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், The Girlfriend திரைப்படத்தின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
