டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில் “நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரெயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும். பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
