நடிகை ராஷ்மிகாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லி வருகிறது. அந்த மோதிரமும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் , தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பே ச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, ‘இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று’ என்று கண்ணடித்து சிரித்தார்.
இந்த நிலையில், விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
