பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது.
இந்த 2 பாகத்திலும் காசிம் பாய் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய் (55). இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்துள்ளார். தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
