மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர் இழப்புக்கு விவசாயி ஒருவருக்கு, அம்மாநில அரசு 6 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 31,628 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை அரசு அறிவித்தது.
இந்நிலையில், மராத்வாடாவின் தாவர்வாடி கிராமத்தை சேர்ந்த திகம்பர் சுதாகர் டாங்டே என்ற விவசாயிக்கு 6 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடாக, 6 ரூபாய் என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, ஒரு கப் டீ கூட வாங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
