Saturday, December 27, 2025

‘ஒரு பெண்ணின் புகைப்படத்தில் 100 பெயர்கள்’ : ஆதாரத்தை வெளியிட்ட ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆகஸ்ட் மாதம், சில ஆதாரங்களை வெளியிட்டார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் ஆலந்த் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டை வைத்தார்.

இந்த நிலையில், ’எச் பைல்ஸ்’ என்ற தலைப்பில் சான்றுகளை வெளியிட்டுள்ளார். அதில் மிக முக்கியமாக 2 கோடி வாக்காளர்களை கொண்ட ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராய் தொகுதியில் உள்ள 10 வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரே பெண்ணின் புகைப்படம், 22 பெயர்களில் இடம்பெற்றுள்ளன. கபி சீமா, கபி ஸ்வீட்டி, கபி சரஸ்வதி போன்ற பெயர்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் அந்த பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மேத்யூஸ் பெரேரா.

போலியாக 5,21,619 வாக்காளர்கள், போலி முகவரி கொண்ட 93,174 வாக்காளர்கள், ஒரே புகைப்படம் கொண்ட 19,26,351 வாக்காளர்கள் ஹரியாணாவில் இடம்பெற்றிருந்தனர்.

ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் 100 பெயர்கள் உள்ளன. மற்றொரு பெண்ணின் புகைப்படம், இரண்டு வாக்குச் சாவடிகளில் 223 பெயர்களில் இடம்பெற்றுள்ளன.

இதன்காரணமாகதான் தேர்தல் ஆணையம் சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சிக்கிறது.” எனத் தெரிவித்தார்.

Related News

Latest News