Tuesday, January 27, 2026

மீண்டும் உலக சாதனை படைத்த நடிகர் புகழின் மகள் ரிதன்யா…

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் புகழுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

குறிப்பாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

இதற்கிடையே, புகழுக்கு கடந்த 2022-ம் ஆண்டு நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2023-ம் ஆண்டு ரிதன்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது.

புகழின் மகள் ரிதன்யா தன் தந்தைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறு வயதிலேயே உலக சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு 2 கிலோ டம்பெல்ஸை அதிக நேரம் தூக்கிய குழந்தை என்கிற உலக சாதனையை ரிதன்யா படைத்திருந்தார். 17 விநாடிகள் தூக்கி அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது, பிறந்த 11 மாதம் 14 நாட்களில் அதிக படிகள் ஏறிய குழந்தை என்கிற சாதனையையும் ரிதன்யா படைத்திருக்கிறார்.

இந்த சாதனையை படைத்ததன் மூலம் International Book of Records-ல் இடம்பிடித்து இருக்கிறார் ரிதன்யா. அவர் மொத்தம் 45 படிகள் தொடர்ச்சியாக ஏறி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார்.இதனை புகழ் பெருமையுடன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரிதன்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related News

Latest News