இந்துஜா குழுமத் தலைவருமான கோபிசந்த் பர்மானந்த் இந்துஜா காலமானார். அவருக்கு வயது 85.
ஜிபி என்று பலரால் அழைக்கப்படும் கோபிசந்த் பிரேமானந்த், கடந்த சில வாரங்களாக லண்டனில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், இந்துஜா ஆட்டோமோட்டிவ் லிமிடெட்டின் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், 2023 ஆம் ஆண்டு தனது சகோதரர் ஸ்ரீசந்த் இந்துஜா டிமென்ஷியாவால் இறந்ததைத் தொடர்ந்து, குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஹிந்துஜா குழுமத்தின் 4 சகோதர்களில் இரண்டாவது சகோதரரான கோபிசந்த் பிரேமானந்த், குடும்பத்தின் வணிகத்தை உலக அரங்கில் கொண்டுசென்றதில் முக்கியப் பங்காற்றியவர். ஆட்டோமொபைல், எண்ணெய், வங்கி மற்றும் சுகாதாரத் துறையில் ஹிந்துஜா குழுமம் கால் பதித்து பெரும் வளர்ச்சியடைந்ததில் கோபிசந்த் பிரேமானந்தின் பங்கு அளப்பறியது.
