டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அதன்படி, ரயில் நிலையத்தில் உதவியாளர் துணையுடன் செல்போன் UTS சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் முன்பதிவு செய்யப்படாத சாதாரண பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் பெறுவது சுலபமாகும். நெரிசலை குறைப்பதும், பயணிகளுக்கு விரைவான, வசதியான டிக்கெட் வழங்குவதும் இந்த புதிய திட்டம் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
