புதுடெல்லி இருந்து திருவனந்தபுரம் வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில், வர்கலா ரயில் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் புறப்பட்டதும், பொதுப் பெட்டியில் இருந்த 2 பெண்களை சுரேஷ்குமார் என்பவர் மது போதையில் காலால் உதைத்து, ரயிலிலிருந்து கீழே தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் படுகாயங்கள் பெற்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மற்றொருவர் கதவை பிடித்து தொங்கிய நிலையில் இருந்தார். இந்த தாக்குதல் குறித்து பயணிகள் ரயிலை நிறுத்தி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு உடனடியாக அழைத்துக் கொண்டு சென்றனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
