சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் விரைவில் விலை உயர்வை எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கேலக்ஸி எம் மற்றும் ஏ சீரிஸ் மாடல்கள் உயர உள்ளன. ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மெமரி சிப்களுக்கான விலையானது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்
இந்த விலை உயர்வு, குறிப்பாக மிட்ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் வகை போன்களில் ஏற்படும் என்றும், ஏற்கனவே பிரீமியம் விலையில் உள்ள கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்கள் உடனடியாக பாதிக்கப்பட மாட்டாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், புதிய சாம்சங் போன் வாங்க திட்டமிட்டவர்கள் விரைவில் வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், உலகளவில் RAM மற்றும் மெமரி சிப் சந்தையில் 2027 அல்லது 2028 வரை உற்பத்தி சிக்கல்கள் நிலவ வாய்ப்பு உள்ளது.
