Saturday, December 27, 2025

அனில் அம்பானியின் ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கிறது. இந்த கடன் தொகையை வாங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் மற்ற ஷெல் நிறுவனங்களுக்கும் , நிறுவனத்தின் மற்ற அமைப்புகளுக்கும் மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களில் மும்பையில் உள்ள 66 ஆண்டுகல் பழமையான அம்பானியின் வீடு , அவரது குழும நிறுவனங்களுக்கு சொந்தமான பிற குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News