IPL தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக பட்சமாக மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
IPL தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை பேசப்பட்டு வரும் பெயராக MS தோனி இருக்கிறது. 44 வயதிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துருகிறார். இந்த நிலையில் அவரது ஓய்வு குறித்து கடந்த பல ஆண்டுகளாக பல வதந்திகள் வந்த கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
2020-ம் ஆண்டு IPL-ன் கடைசி லீக் போட்டியின்போது “இதுதான் நீங்க மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா?” என்ற கேள்விக்கு ‘கண்டிப்பாக இல்லை’ என பதிலளித்திருந்தார் CSK கேப்டன் தோனி. அந்த புகைப்படத்தை வெளியிட்ட CSK marks 5 years of #DefinitelyNot என பதிவிட்டிருந்தது. இந்த பதிவை வைத்து அடுத்த ஆண்டும் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
