காற்று மாசு தானே என்று அலட்சியம் வேண்டாம்! உயிரையே கூட பறித்துவிடும்! உஷார் மக்களே!

நமது தினசரி வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் காற்றே, பல்வேறு காரணங்களால் தற்போது தீவிரமாக மாசடைந்து வருகிறது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை, வாகனங்களின் எரிவாயு, கழிவுப்பொருட்கள் எரிப்பு, கட்டுமானப் பணிகளிலிருந்து எழும் தூசித் துகள் போன்றவை காற்றில் கலந்து அதன் தரத்தை குறைக்கின்றன. இதனால் காற்று மாசு இரண்டு முக்கிய வகைகளில் பிரிக்கப்படுகிறது – தூசி மற்றும் துகள் மாசு மற்றும் வேதியியல் மாசு.

இந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடல்நலத்தில் பல பிரச்சினைகள் உருவாகின்றன. நீண்டகாலம் மாசு காற்றை சுவாசிப்பவர்கள் மூச்சுத் திணறல், இருமல், ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், இதய மற்றும் சுவாச நோயாளிகள் அதிக ஆபத்துக்குள்ளாகிறார்கள். உலக சுகாதார அமைப்பான WHO-வின் தகவலின்படி, ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 70 லட்சம் பேர் காற்று மாசால் உயிரிழக்கிறார்கள் என்பது கவலைக்குரியது.

அதுமட்டுமின்றி, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டைஆக்சைடு போன்ற வாயுக்கள் கண் எரிச்சல், தலைவலி, தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. நகரப்பகுதிகளில் “ஸ்மாக்” (Smog) எனப்படும் புகை மூட்டம் மூலமாக காற்றின் தன்மை குறைந்து, சூரிய ஒளி ஊடுருவுவதும் தடைபடுகிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, மரங்கள் நடுதல், வாகன பயன்பாட்டைக் குறைத்தல், பசுமை ஆற்றல் பயன்பாடு போன்றவை மட்டுமே எதிர்காலத்தில் நமக்கான சுத்தமான காற்றை மீட்டுத் தரக்கூடிய தீர்வுகள் என்பதே.

Related News

Latest News