கர்நாடகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந்தேதி கர்நாடகம் உதயமான நாளையொட்டி ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கர்நாடக அரசு தேர்வு செய்து ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இலக்கியத்துறையில் 6 பேருக்கும், நாட்டுப்புற கலையில் 8 பேருக்கும், இசைத்துறையில் 2 பேருக்கும், திரைத்துறையில் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை விஜயலட்சுமி சிங் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் மருத்துவத்துறை, சமூக சேவை துறை, விவசாயத்துறை என பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
ராஜ்யோத்சவா விருது பெறும் அனைவருக்கும் தலா ₹5 லட்சம் வெகுமதியும், தலா 25 கிராம் தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
