Thursday, December 25, 2025

ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சேவை இலவசம் : ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி வரும் ஜியோ நிறுவனம், தற்போது தனது பயனர்களுக்காக புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி, தகுதி வாய்ந்த ஜியோ பயனர்கள், ₹35,100 மதிப்புள்ள Gemini AI Pro சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.

இந்த சேவையில், பயனர்கள் வரம்பற்ற Chats, 2TB Cloud Storage, மற்றும் வீடியோ, புகைப்படம் உருவாக்கும் வசதி ஆகியவற்றைப் பெறலாம்.

முதற்கட்டமாக 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து ஜியோ பயனர்களும் இந்த சலுகையைப் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News