உலகில் பல கோடி மரங்கள் இருந்தாலும், அவற்றில் சில மரங்கள் மட்டும் காலத்தின் சாட்சியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து இன்னும் உயிருடன் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள “Methuselah Tree” எனப்படும் பிரபலமான பைன் மரம் ஆகும்.
இந்த மரம் சுமார் 4,800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். கி.மு. 2833ம் ஆண்டு காலத்திலேயே இது முளைத்ததாக கூறப்படுகிறது. அதாவது, எகிப்திய கட்டடங்கள் கட்டப்பட்ட காலத்திலேயே இது இருந்திருக்கிறது.
இந்த மரம் 11,000 அடி உயரமுள்ள வைட் மவுண்டனில் (White Mountain) அமைந்துள்ளது. கடும் காற்று, உறைபனி, தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இதன் உயிரை அழிக்க முடியவில்லை. அதற்குக் காரணம், இதன் மரச்செறிவு மிகவும் திடமானது, மேலும் வளர்ச்சி மிக மெதுவாக நடைபெறுகிறது. இதனால் அது நீண்ட ஆயுள் பெறுகிறது.
சுவாரஸ்யமாக, இதன் துல்லியமான இருப்பிடத்தை அரசு ரகசியமாக வைத்துள்ளது. மரத்தை சேதப்படுத்தாமல் காப்பதற்காகவே இது செய்யப்பட்டுள்ளது. Methuselah மரம் மட்டும் அல்லாமல், சுவீடனில் உள்ள “Old ஜிக்கோ (Tjikko)” மரமும் சுமார் 9,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
இந்தப் பழமையான மரங்கள், மனித வரலாற்றை விடப் பெரிய உயிரியல் சாட்சிகள் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இயற்கையின் பொறுமை, வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றின் உயிருடன் நிற்கும் உருவங்களில் ஒன்று எது என்றால் அது Methuselah மரம் என்று சொல்லலாம்.
