TODAY GOLD RATE : (31-10-2025) இன்றைய தங்கம் நிலவரம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த 17-ந் தேதி விலை உச்சத்தை தொட்டது. அதாவது, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97600-க்கும் விற்பனையாகி பெரும் அதிர்ச்சியை தந்தது.

இந்த நிலையில், நேற்று காலையில் குறைந்த தங்கம் விலையானது மாலையில் அதிரடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300க்கும் ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலையானது இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கு விற்பனையான நிலையில் இன்றும் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News