Sunday, December 28, 2025

கரையைக் கடந்தது மோந்தா புயல்., ஆந்திராவில் கனமழை

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் புயல் கரையை கடந்தது.

புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.

Related News

Latest News