தலைகீழாக மாறும் தங்கம் விலை! மகிழ்ச்சி மழையில் நனையும் நகை பிரியர்கள்!

அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ந்து உயர்வில் இருந்த தங்கம் விலை, தற்போது சரிவு பாதையில் நகர்கிறது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு விலை வீழ்ச்சி கணிசமாக காணப்படுகிறது. அக். 27ம் தேதியான நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கும் விற்பனையாகியது.

அதனைத் தொடர்ந்து அக். 28ம் தேதி அதாவது இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.90,400க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.9,450க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.75,600க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இதே போக்கில், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவால் நகை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மீது ஆர்வம் குறைந்திருப்பது, இந்த விலை சரிவுக்குக் காரணமாகும். அமெரிக்கா – சீனா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் உலக பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் தங்கம் மீதான தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டாலர் மதிப்பு உயர்வால், டாலர் அல்லாத நாணயங்களில் முதலீடு செய்பவர்களுக்கு தங்கம் விலை அதிகமாக தோன்றுகிறது. இதுவும் விலை குறைவுக்கு வழிவகுத்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள், இச்சூழ்நிலை நீடித்தால் தங்கம் விலை மேலும் குறையக்கூடும் என்றும், சர்வதேச சந்தையில் மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் உயர வாய்ப்பும் இருப்பதாக கூறுகின்றனர்.

Related News

Latest News