ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பேருந்து நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதில் பஸ் முழுவதும் உடனடியாக தீப்பற்றியது. இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பஸ்சின் மேற்கூரையில் இருந்த கியாஸ் சிலிண்டர், எரிபொருள் போன்றவை தீ வேகமாக காரணம் என தெரியவந்துள்ளது.
