7 மாத கர்ப்பிணியான டெல்லியைச் சேர்ந்த பெண் போலீஸ் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 145 கிலோ எடையை தூக்கி அசத்தியுள்ளார். மன உறுதி இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்வார்கள். இது உண்மை என்பதை டெல்லியைச் சேர்ந்த பெண் காவலர் நிரூபித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற அகில இந்திய காவலர்களுக்கான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், டெல்லியைச் சேர்ந்த பெண் காவலரும் 7 மாத கர்ப்பிணியான சோனிகா யாதவ் 145 கிலோ எடையைத் தூக்கி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இவரது அசாத்திய திறமைக்கு பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
