தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. அதாவது, ஒரு சவரன் தங்கம் ரூ.97 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது.இதனைத்தொடர்ந்து தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதாவது, தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1.65.000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
