நவம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு
நவம்பர் 1 முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் சில வாலட்/ஆப் பேமெண்ட்களுக்கு புதிய கட்டணங்கள் பொருந்தும். பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகளுக்கு 3.75% கட்டணம் விதிக்கப்படலாம்.
Also Read : வங்கிக் கணக்கில் வரப்போகுது புது அப்டேட்., நவம்பர் 1 முதல் அமல்
ஆதார் அப்டேட்
ஆதார் புதுப்பிப்பை UIDAI எளிதாக்கியுள்ளது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்ணை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மையம் செல்ல தேவையில்லை. பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு மட்டும் மையம் செல்ல வேண்டும்.
வங்கி கணக்குகள்
இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள், லாக்கர்களுக்கு 4 நாமினிகளை நியமிக்கலாம். ஒவ்வொரு நாமினிக்கும் பங்கை வாடிக்கையாளர் தீர்மானிக்கலாம். இது வங்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
