இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை. அதாவது, தங்கம் விலை கடந்த 17-ம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிலும் குறிப்பாக, தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று விலை குறையத் தொடங்கியது.
அதாவது, கடந்த 24-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.இந்த நிலையில், நேற்றும் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த சூழலில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1.70.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
