பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இன்று காலமானர். அவருக்கு வயது 71. சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த சதீஷ் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல் நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். சதீஷ் ஷாவின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சதீஷ் ஷா இதுவரை 250 க்கும் மேறட்ட படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் அவர் அதிகம் நடித்துள்ளார்.
