மனித உணர்வுகள் மற்றும் வார்த்தைகள், இயற்கையின் அடிப்படை அமைப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற கருத்து சமீபத்திய அறிவியல் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தண்ணீர் மீது வார்த்தைகளின் தாக்கம் குறித்து ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் மசாரு எமோட்டோ மேற்கொண்ட ஆய்வுகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன.
அவரது பரிசோதனைகளில், ஒரே மாதிரியான தண்ணீர் மாதிரிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒன்றிற்கு “அன்பு”, “நன்றி”, “சாந்தம்” போன்ற நேர்மையான வார்த்தைகள் சொல்லப்பட்டன; மற்றொன்றிற்கு “வெறுப்பு”, “அழிவு”, “முட்டாள்” போன்ற எதிர்மறை வார்த்தைகள் கூறப்பட்டன. பின்னர் இரு தண்ணீர் மாதிரிகளும் உறையவைத்து மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, நேர்மையான வார்த்தைகள் பேசப்பட்ட தண்ணீரில் அழகான பனித்துளி வடிவங்கள் உருவாகியிருந்தன. எதிர்மறையான வார்த்தைகள் பேசப்பட்ட தண்ணீரில் குழப்பமான, உடைந்த வடிவங்கள் மட்டுமே காணப்பட்டன.
இந்த ஆய்வு, வார்த்தைகள் ஒரு அதிர்வலை அதாவது vibration வடிவத்தில் இயங்குகின்றன என்பதையும், அவை தண்ணீரின் மூலக்கூறு அமைப்பை மாற்றக்கூடிய சக்தி கொண்டவை என்பதையும் வெளிப்படுத்தியது. இதன் மூலம் மனித உணர்வுகள், நம்பிக்கை மற்றும் நன்றி உணர்வு போன்றவை நம் உடலின் 70% தண்ணீரையும் நேரடியாக பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களின் வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை ஆற்றல் வடிவம் என்பதையும், நம்முடைய எண்ணங்கள் கூட சுற்றுப்புறத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டவை என்பதையும் இவ்வாய்வுகள் வலியுறுத்துகின்றன. இதனால், ‘நல்ல வார்த்தைகள் நம்மையும், உலகத்தையும் அழகாக்கும்’ என்ற கூற்று, விஞ்ஞான ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
