சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளது துங்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் இறந்துபோனார். அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன் பின்னர் இறந்தவர் வீட்டில் விருந்து பரிமாறப்பட்டு உள்ளது.
உணவு சாப்பிட்ட பலருக்கு சிறிது நேரத்தில் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஊர்மிளா என்ற 25 வயது இளம்பெண், தனது 2 மாத குழந்தையுடன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மேலும் 3 பேர் ஒரு வார இடைவெளிக்குள் அடுத்தடுத்து இறந்தனர்.
