சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.
அந்தவகையில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடும்போது, நேற்று கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்தது. அதாவது, ஒரு கிராம் ரூ.11.400-க்கும், ஒரு பவுன் ரூ.91.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில் வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாயும்,சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அதாவது, கிராம் ரூ.11,500-க்கும், சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1. 70.000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
