சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் எட்டாக்கனியாக மாறிய விட்டது.
அதாவது, நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11.500-க்கும், ஒரு சவரன் ரூ.92.000 விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை சற்று உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,400-க்கும் சவரனுக்கு, 1120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கடந்த சில நாட்களாகவே விலை குறைந்து வருகிறது. அதன் படி , இன்றும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
