Tuesday, January 27, 2026

லோகா ஓடிடி தேதி! எப்போ தெரியுமா?

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான படம் லோகா. இப்படம் கடந்த ஆக. 28 ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடித்திருந்தனர். மேலும், சூப்பர் வுமன் கதையாக உருவான இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.

இப்படத்தில் சுவாரஸ்யமான கதைகளமும், ஆக்சன் காட்சிகள் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் இந்தியளவில் வசூலில் சாதனை படைத்தது.

உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் கேரள திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News