Tuesday, January 27, 2026

வசூல் நாயகனாக அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்

‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2019ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரூ.90 கோடி வசூல் பெற்றது. இவரது இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகளவில் ரூ.105 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரூ.37 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. அறி​முக இயக்​குநர் கீர்த்​தீஸ்​வரன் இயக்கியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியானது.

தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலித்தது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படங்கள் மற்றும் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பிரதீப் ரங்கநாதன் வசூல் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

Related News

Latest News