ஏமாற்றிய மணமகனை 8 ஆண்டுகளாக பழிக்கு பழி! பயங்கரமா பிளான் பண்ணி கதறவிட்ட பெண்!

காதலின் அடிப்படை நம்பிக்கையே. கணவன்–மனைவி இருவரும் ஒருவர்மீது ஒருவர் நேர்மையாக இருந்தால், அந்த உறவு நிலைத்திருக்கும். ஆனால் சிறிய துரோகம் கூட அந்த உறவை நொறுக்கிவிடும். நம்பிக்கை குலைந்தவுடன் அன்பும் உறவும் முடிவுக்கு வரும் என்பது உண்மை.

இத்தகைய சம்பவம் ஒன்று உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு வைரலாகியுள்ளது. திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது வருங்கால கணவர் கடந்த ஆறு மாதங்களாக வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்ததை ஒரு பெண் அறிந்தார். அவர் அந்த பெண்ணுடன் காதலில் மூழ்கி, ஒன்றாக வாழ்ந்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதை அறிந்த உடனே அந்த பெண் திருமணத்தை ரத்து செய்து விட்டார். ஆனால் கதை அதோடு முடியவில்லை. தன்னை ஏமாற்றிய நபரிடம் பழிவாங்க தீர்மானித்தார்.

அவர் பழிவாங்கும் விதம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த நபரின் வாழ்க்கையை அமைதியாக, ஆனால் திட்டமிட்டு துயரத்தில் ஆழ்த்தி வருகிறார் அந்த பெண். சமீபத்தில் “இட்ஸ் எ கேர்ள் திங்” என்ற பாட்காஸ்டில் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், இதற்குத் தனது முன்னாள் கணவரின் சகோதரி ரகசியமாக உதவி செய்ததாக தெரிவித்தார்.

அவர் பயன்படுத்திய யுக்தி மிகச் சாமர்த்தியமானது. பிரச்சனைக்குரிய எவராவது அவளிடம் மொபைல் எண்ணைக் கேட்டால், தன்னுடையதைச் சொல்லாமல் அந்த நபரின் எண்ணையே கொடுப்பார். இதனால் அவருக்கு தொடர்ச்சியாக தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தன. பல முறை எண்ணை மாற்றியிருந்தாலும், அவரது சகோதரி ஒவ்வொரு முறை புதிய எண்ணை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியதால் பழிவாங்கல் தொடர்ந்தது.

அமைதியாகவும் நுட்பமாகவும் பழிவாங்கிய அந்தப் பெண்ணின் செயலை சமூக ஊடக பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related News

Latest News