தங்கம் விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.260-ம், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, மாலையில் அந்த விலையில் இருந்து கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு ரூ.2400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து தற்போது ரூ.180 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,80,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News