விராட் கோலியிடம் இத்தனை பங்களா இருக்கா? மொத்த மதிப்பு எவ்ளோ தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அளவில் புகழ்பெற்ற நட்சந்திர வீரருமான விராட் கோலி, மைதானத்தில் மட்டும் அல்ல; சொத்து முதலீடுகளிலும் வல்லுநராக திகழ்கிறார்.

சுமார் ரூ.1,020 கோடி மதிப்புடன் இந்தியாவின் மிக முக்கிய கோடீஸ்வர விளையாட்டு வீரர்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். அவரது சொத்துகள் மற்றும் ஆடம்பரமான வீடுகளின் விவரங்களை இங்கே காண்போம்.

குர்கானில் ரூ.80 கோடி மதிப்புள்ள பங்களா

விராட் கோலியின் சொத்து பட்டியலில் முக்கிய இடம் இருப்பது அவரது குர்கான் பங்களா. சமீபத்தில் வெளியான தகவல்கள் படி, இதன் மதிப்பு சுமார் ரூ.80 கோடி. இப்பங்கலா சுமார் 500 சதுர யார்ட்ஸ் பரப்பளுவை கொண்டுள்ளது.

நவீன கால அரண்மனை போல் வடிவமைக்கப்பட்ட இந்த வீடு, அழகான கட்டமைப்புகள் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் கண்ணை ஈர்க்கிறது.

மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள குடியிருப்பு

விராட் கோலி மற்றும் அவரது மனைவி, பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, மும்பையின் மைய வொர்லி பகுதியில் உள்ள ‘ஓம் காரா 1973’ என்ற பிரமாண்டமான குடியிருப்பில் வசிக்கின்றனர். இது 35-வது மாடியில் அமைந்துள்ளது.

கடல் காட்சி பெற்ற இப்பகுதி 7,000 சதுர அடி பரப்பளவு கொண்டது மற்றும் மதிப்பு சுமார் ரூ.34 கோடி. இந்த வீட்டின் மேலிருந்து மும்பையின் அழகான கடல்நோக்கிய காட்சியைக் காண முடிகிறது.

அதேபோல் விராட் கோலி, மும்பைக்கு அருகில் உள்ள பிரபலமான விடுமுறை இடமான அலிபாக்கில் ஒரு சொகுசு விடுமுறை இல்லத்தை வைத்துள்ளார். இந்த விடுமுறை இல்லத்தின் மொத்த மதிப்பு ரூ.32 கோடி ஆகும். இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் 8 ஏக்கர் நிலத்தை ரூ.19.24 கோடிக்கு வாங்கினார். அதன் கட்டுமானப் பணிகளுக்காக மேலும் ரூ.13 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த வீடு 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இல்லத்தில் பரந்த தோட்டங்கள், பெரிய நீச்சல்குளம் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இந்தச் சொத்துகளின் அனைத்தும் சேர்த்து விராட் கோலியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,020 கோடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News